ஜோதிகா படத்துக்கு வாங்க.. பட்டு புடவை வாங்கிட்டு போங்க..!

magalir mattum silk saree gift 1

’36 வயதினிலே’ படத்தில் ஜோதிகாவின் ரீ என்ட்ரிக்கும் அவரது சிறப்பான நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தததாக ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்துள்ளார். ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ள இந்தப்படத்தில் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஆகியோ முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்..

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் செப்-15ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டுப்புடவை’ என்கிற பரிசுத்திட்டத்தை ரசிகர்களுக்காக அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தின்படி, மகளிர் மட்டும் படத்தை காண திரையரங்குகளுக்கு வரும் பெண்களுக்கு முதல் மூன்று நாளைக்கு (அதாவது செப்-15,16,17) ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சிக்கும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு பட்டு புடவை பரிசாக வழங்கப்பட உள்ளது.