ஆகஸ்ட்டில் சைமா (SIIMA) விருது வழங்கும் விழா..!

பிலிம்பேர் விருதுகளை போலவே சைமா (தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா) விருதும் திரையுலகினர் அனைவரும் பெற விரும்பும் விருதுதான்.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப்படங்களுக்கு 19 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.

தற்போது 5வது வருடமாக 2014ம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் துபாயில் நடக்கிறது. இதற்கான முறையான விழா பற்றிய அறிமுகம் மற்றும் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் நடிகர் ராணா, நடிகைள் அமலாபால், டாப்ஸி, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.