சித்தார்த்துக்கு ஜோடியானார் கேத்தரின் தெரசா..!

siddharth-catherin

தமிழில் வெளியான ‘அவள்’ படத்தின் கௌரவமான வெற்றியை தொடர்ந்து சித்தார்த் தமிழில் இருந்து அப்படியே கேரளா பக்கம் தாவிய சித்தார்த் மலையாளத்தில் தான் முதன்முதலாக ‘கம்மார சம்பவம்’ என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ள சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது..

இந்தப்படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சதீஷ், கபீர் சிங், காளி வெங்கட் ஆகியோர் நடிக்கின்றனர். சாய்சேகர் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.