மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் சித்தார்த்

aruvam

ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘அருவம்’. இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் வெளியாகியுள்ளது. ‘அருவம்’ என்கிற படத்தின் டைட்டிலே இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது

அருவம் என்பது உருவம் என்பதன் எதிர்ப்பதம்.. ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இந்த படத்தில் பேசியுள்ளார்கள். ஏற்கனவே அவள் இந்த ஹாரர் படத்தில் சித்தார்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப்படத்தில் கபீர் சுகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர் சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி மற்றும் இன்னும் பல நடிகர்களும் இதில் நடித்துள்ளனர் இந்த படத்தில் வில்லனாகவும் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார் ஸ்டண்ட் சில்வா..