‘காமெடி’ பேய்களை ஓரங்கட்ட வருகிறது ‘அவள்’ பேய்..!

aval 1

கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களை விட பேய் காமெடி படங்களே தமிழ் சினிமாவில் வெளி வர ஆரம்பித்து,மக்களிடத்தில் பேய் படம் பார்க்கும் போது வரும் அச்ச உணர்வை தகர்த்து விட்டது என்று கூறலாம்.இது பேய் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது.

ஆனால் கவனித்து பார்த்தால், சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட, உண்மையான அச்ச உணர்வை தூண்டும் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், உறையவைக்கும் ஒரு பேய் படத்தை ‘அவள்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் வெளியான ‘அவள்’ படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையான பேய் பட ரசிகர்களுக்கு ‘அவள்’ திரைப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கும் ஒரு திகில் படம் எனக் கூறலாம்.