அஜித் நண்பர் இயக்கும் குறும்படத்தை தயாரிக்கும் சித்தார்த் விபின்..!


‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பைட் பண்ணப்போவதாக உதார் காட்டி விஜய்சேதுபதியிடம் செம மாத்து வாங்கும் இசையமைப்பாளரும் காமெடி நடிகருமான சித்தார்த் விபினை தெரியும் தானே.. இப்போது அவர் ‘லென்ஸ்’ என்கிற குறும்படத்துக்கு இசையமைக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த குறும்படத்தையும் அவரே தயாரிக்கிறார்.
இந்த குறும்படத்தை இயக்குபவர் ஜெயபிரகாஷ். இவர் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் நண்பராக நடித்துள்ளார். வில்லனால் கடத்திச்செல்லப்பட்ட தனது மகளை மீட்டுத்தருமாறு அஜித்தின் உதவியை நாடிவருவாரே அவர்தான் இவர்.. கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற ஆனந்தசாமி என்பவர் கதாநாயகனாக நடிக்க, அஸ்வதி லால் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.