அவரேதான் இவர்.. ஆச்சர்யப்படுத்திய இசையமைப்பாளர்..!

சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்கு இசையமைத்துள்ளார் சித்தார்த் விபின். இவர் தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கும் இசையமைத்தவர். அதுமட்டுமல்ல அந்தப்படத்தில் ஹீரோயின் நந்திதாதாவின் நண்பராகவும் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதியுடன் சண்டை போடுவது மாதிரி “18 வயசுக்கு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனமானவங்க”ன்னு நான்ஸ்டாப்ப பில்ட் அப் கொடுத்துட்டு, அதற்கு அப்புறம் அடியும் வாங்குவாரே அவர்தான் இவர். இவர்தான் அவர்.. இப்போ ஃபேஸ்புக்ல இவரோட இந்த கமெண்ட்தான் ரொம்பவே ஃபேமஸ். இப்போது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திலும் மிக முக்கியமான நகைச்சுவை கேரக்டரில் நடித்திருக்கிறார் சித்தார்த் விபின்.