சிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது போல, சிபிராஜூக்கும் இந்த படம் ஒரு வெற்றிகரமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அதற்கேற்ற வகையில் இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் சிபிராஜ்..
யு. அன்பரசன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரின் காஞ்ச்வாலா கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, ரித்விகா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.. ஆன்மீக புகழ் கொண்ட கும்பகோணத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது சிறப்பம்சம்.. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன..
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக், இயக்குனர் அன்பரசன் இந்த படத்தின் கதையை தன்னிடம் கூறியபோது படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சிகளுக்காக சொன்ன தேதிகளை விட நிறைய நாட்கள் படப்பிடிப்பு தேதி அதிகரிக்கும் என எதிர்பார்த்தாராம். ஆனால் அப்படி எந்தவித கூடுதல் நாட்களுக்கும் வேலை வைக்காமல் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்களாம்.. அதற்கு படக்குழுவினரின் முழு ஒத்துழைப்பு தான் காரணம் என்கிறார் ஸ்ருதி திலக்.