ரசிகர்கள் வரவேற்பால் சத்யாவுக்கு காட்சிகள் அதிகரிப்பு..!

sathya theater increase

சிபிராஜ் நடித்த ‘சத்யா’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. இந்தப்படத்துடன் சசிகுமாரின் ‘கொடிவீரன்’ மற்றும் மலையாள நடிகர் நிவின்பாலி நடித்த ரிச்சி, கபாலி செல்வாவின் 12.12.1950 ஆகிய படங்களும் வெளியாகின. இதில் சத்யாவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சிறிய அரங்குகளில் திரையிடப்பட்திருந்த சத்யா, மெயின் தியேட்டர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தமிழகம் முழுதும் பல தியேட்டர்களில் இந்தப்படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வந்துபோகும் திடீர் திருப்பங்களும் விறுவிறுப்பான திரைக்கதையும் தான் ரசிகர்களை ஈர்த்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, வரலட்சுமி, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.