சிபிராஜின் ஜாக்சன் துரை இன்று இனிதே ஆரம்பம்..!

 

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது அடுத்த படமான ‘ஜாக்சன் துரை’ படத்தையும் வெற்றிகரமாக கொடுக்க, சிபிராஜ் பேய்களின் களத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்று சாதாரணமாக ஒற்றைவரியில் சொல்லிவிடமுடியாது. காரணம் பேய்ப்படங்களில் கூட வித்தியாசம் காட்டினால் தான் ரசிகர்களிடம் அது எடுபடும்..

பேய்ப்படங்களில் மிக முக்கியமானது ஒப்பனைதான். அதனால் தான் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற CONJURING படத்தின் ஒப்பனை தொழில் நுட்பம் இந்தப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது. தவிர இந்தப்படத்தின் கதை 1940ல் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது தான் இதில் ஹைலைட்டான் விஷயம்..

சிபிராஜுக்கு ஜோடியாக பிந்துமாதவி நடிக்கும் இந்தப்படத்தை தரணீதரன் என்பவர் இயக்குகிறார். சத்யராஜ்,கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, தமிழில் முதன் முறையாக ஹாலிவுட்  நடிகர்  சச்சேரி   அறிமுகமாகிறார்.  சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே ஆரம்பித்துள்ளது.