சிபிராஜை எக்ஸ்ட்ரா டூட்டி பார்க்கவைத்த ‘வாஸ்து மீன்’..!

சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நாளை (மார்ச்-17) வெளியாகின்றது. கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் மணி சேயோன் இயக்கியுள்ளார்.. இவர் இயக்குநர் அறிவழகனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்தப்படத்தை ‘ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் வெளியிடுகிறார்.

இந்தப்படத்தில் மீனுடன் நடிக்கும் ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவங்களை பற்றி சிபிராஜ் என்ன சொல்கிறார்..?.

“நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் என்னுடன் நடித்தது ஒரு நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு நடிப்பதற்கு அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் இந்த மீனுடன் நடித்தது சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இருப்போம், ஆனால் அந்த காட்சிகளில் மீன் ஓடி விடும். எனவே நாங்கள் பல ‘ரீ டேக்’ எடுக்க வேண்டியதாக போய் விட்டது” என்றார்..

ஆப்ட்ரால் ஒரு மீன், சிபிராஜை எக்ஸ்ட்ரா டூட்டி பார்க்க வைத்துவிட்டதே.. படத்தில் இன்னும் என்னென்ன அட்டகாசங்கள் பண்ணியிருக்கிறதோ..? நாளை தெரிந்து விடத்தானே போகிறது.