‘சி-3’ படத்தை இணையத்தில் வெளியிட்டால்..? ; நீதிமன்றம் எச்சரிக்கை..!

si 3 court order

அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சூர்யா-ஹரி கூட்டணியில், சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள ‘சி-3’ படம் நாளை வெளியாகிறது. பொதுவாக ஒரு படம் ரிலீசான அன்றே அதனை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.. ஆனால் ‘சி-3’ படத்தை இணையதள மோசடி பேர்வழிகள் ரிலீசான அன்றே இணையதளத்தில் வெளியிடுவதாக சவால் விட்டிருந்தார்கள்..

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம் ‘சி-3’ திரைப்படத்தை எந்த ஒரு இணையதளத்திலும், தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் யாரும் வெளியிட கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இந்தப்படத்தை திருட்டுத்தனமாக யாரும் இணையத்தில் பதிவேற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றே தெரிகிறது.