மார்ச்-16 முதல் படப்பிடிப்பு நிறுத்தம்..!

tpc 1

கட்டணங்களை குறைக்கும்படி டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யு.எப்.ஓ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மார்ச்-1 முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டடமாக வரும் மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்றும் சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது. போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடக்காது. தயாரிப்பளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. .

தயாரிப்பளர்களின் கஷ்ட நிலையை உணர்ந்து அவர்களுடன் சேர்ந்து தியேட்டர் உரிமையாளர் சங்கமும் இந்த போராட்டத்தில் குதித்திருந்தால், டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் கதறியடித்துக்கொண்டு ஓடிவந்து காலில் விழுந்திருக்கும். நிலைமை மாறியிருக்கும். ஆனால் இந்த நிறுவனங்கள், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாட்டை வைத்து சுகமாக குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன.

இதோ இப்போது தியேட்டர்களில் கூட்டம் குறைய ஆரம்பித்து, வருமானம் குறைய ஆரம்பித்ததும் அவசர அவசரமாக கூட்டம் போட்டு பேசியிருக்கிறார்கள் ஆனால் இந்த கட்டண விஷயங்களை பற்றி பேசாமல், வேறு ஏதோ சில கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து அதற்காக வரும் மார்ச்-16 முதல் திரைப்படங்களை திரையிடுவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இவர்களுக்கு பிரச்சனையின் தீவிரத்தை புரிய வைப்பதற்காகவும், இவர்களையும் தங்களுடன் ஒன்று சேர்த்து டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் தான் வரும் மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.