மிஷ்கின் டைரக்சனில் சாந்தனு..!

santhanu-myskin

திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை நிரூபித்து வெற்றிக்கொடி நாட்டியவர் கே.பாக்யராஜ். அவரது மனைவி பூர்ணிமாவும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.. ஆயினும் அவர்களது வாரிசான சாந்தனு திரையுலகில் இன்னும் தனக்கான ஒரு தனி அங்கீகாரத்தை பெறவில்லை என்பது தான் அவர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் வருத்தம் தரும் விஷயமாக இருக்கிறது.

இந்தநிலையில் மிஷ்கின் இயக்கவுள்ள புதிய படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சுட்டகதை, நளனும் நந்தினியும் ஆகிய படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்சன்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதால் படம் வெற்றியோ இல்லையோ, சாந்தனுவின் திறமையை ஒரு புதிய கோணத்தில் வெளிப்படுத்துவார் என்பதால், சாந்தனுவின் திரையுலக வாழ்வில் இது திருப்பம் தரும் நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை.