‘காக்கா முட்டை’க்கு ஷங்கர், வசந்தபாலன் பாராட்டு..!

 

விருதுபெற்ற சினிமாக்களில், இதுவரை இல்லாத ஒரு மாற்றமாக வணிகரீதியாக ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது காக்கா முட்டை’. இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடுவதை பார்த்து தமிழ் திரையுலகத்தினர் பிரமித்துப் போயுள்ளனர். இதில் ரசிகர்களின் பாராட்டுகளுடன், ஷங்கர், வசந்தபாலன் போன்ற பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களால் ‘காக்கா முட்டை’யை பொன் முட்டையாக மாற்றியுள்ளனர்.

“காக்கா முட்டையில், மிகச்சிறந்த விஷயங்கள் எளிமையான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகான யதார்த்தம், சரியான மீட்டர், இயல்பான கதாபாத்திரங்கள், நடிப்பு, சிறிதும் எதிர்பார்க்காத இனிமையான கிளைமாக்ஸ்” என இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார். இன்னொருபக்கம் “யதார்த்த வகை படங்களுக்கான காலம் முடிந்து விட்டதோ என்று எண்ணுகிற நிலையில் காக்கா முட்டை திரைப்படம் ஒரு தேவதூதன் போல வந்துள்ள்ளது” என் சிலாகித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.