ஷங்கர்-ரஜினி பட ரிலீஸ் தேதியில் மாற்றம்..!

2.O

ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடித்து வரும் 2.O’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக அனடைபெர்று வருகின்றன.. இந்தப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆஅனால் அதில் இப்போது ஒரு சிறிய மற்றம் செய்யப்பட்டுள்ளதால் இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது..

அதன்படி, அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளுக்கு, இன்னும் சில காலம் தேவைப்படுவதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.