பிரபுதேவா பாடலுக்கு உயிர் கொடுத்த சங்கர் மகாதேவன்-அம்ரீஷ்..!

yung mung chung song

தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் ‘யங் மங் சங்’.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார். மேலும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் (காளகேயா), கும்கி அஸ்வின், மற்றும் பலர் நடிக்கிறார்கள். முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எம்.எஸ்.அர்ஜூன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

இந்தப்படத்தில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த படத்தில் இடம் பெறும் “அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு.. காவல் தெய்வமா மூணு பேரு” என்கிற பாடலை பிரபுதேவா முதன் முறையாக எழுதி இருக்கிறார்.. இந்த பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர்மகாதேவன் பாட சமீபத்தில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது…

பாடலை பாடி முடித்த சங்கர்மகாதேவன் உடனடியாக பிரபுதேவாவுக்கு போன் செய்தார்.. சூப்பர் ஹிட்டாகக் கூடிய இந்த பாடலை நீங்க எழுதி இருக்கீங்கன்னு அம்ரீஷ் சொன்னார்.. இந்த பாட்டு நிச்சயம் எல்லா இடத்திலும் ஒலிக்கும்..” என்று பிரபு தேவாவை வாழ்த்தியதோடு இல்லாமல் இசை அமைப்பாளர் அம்ரீஷையும் பாராட்டினார்.