எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் கன்னடத்தில் நடித்த ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்கிற படம் தீபாவளியன்று வெளியாகிறது. ஷாம் திரையுலகில் நுழைந்து இத்தனை ஆண்டுகளில் அவரது படம் தீபாவளிக்கு வெளியானதே இல்லை என்கிற மனக்குறை அவருக்கு இருந்து வந்தது.. அதை இந்த தீபாவளி தீர்த்து வைத்துவிட்டது..
ஆனால் ஒரு சின்ன ஷாக் நியூஸ்.. படத்தின் ஹீரோ அவர் அல்ல. அப்படியானால்..?.. ஆம்.. இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், இந்தப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்து படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார். கதாநாயகனாக யஷ் என்பவர் நடித்துள்ளார்.
”என்னுடைய ‘6’படம் வெளியான பிறகுதான் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன; வருகின்றன. இதில் நான் ஒரு கேங்ஸ்டராக வருகிறேன்.. தேவ் என்பது என் பாத்திரத்தின் பெயர். தனியாக எனக்குத் தீம் சாங் கூட உண்டு. நான் வரும்போதெல்லாம் அது ஒலிக்கும் . ‘தனி ஒருவன்’ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்” என்கிறார் ஷாம்..