‘சேதுபதி’க்கு ‘U’ சான்றிதழ்..!

Sethupathi-Movie-Still

ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் முதல் படம் என்பது அவர்கள் சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்தை இன்னும் பிரகாசமாக்குவதாகத்தான் இருக்கும்.. ‘காக்க காக்க’வுக்கு பின் சூர்யா, ‘சாமி’க்குப்பின் விக்ரம் ஆகியோர் குறித்த பார்வையே ரசிகர்களிடம் புதிதாக மாறியது..

இப்போது அந்த நிலையின் ஆரம்ப படிக்கட்டில் தான் இருக்கிறார் விஜய்சேதுபதி.. அவர் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘சேதுபதி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குனர் அருண்குமாரே இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.