வெளியாகும் முன்பே சந்தானம் படம் செய்த சாதனை..!

server sundaram

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’.. அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா ஜோடியாக நடித்துள்ளார். ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா துறையிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது

படம் வெளிவருவதற்கு முன்பே இந்தப்படத்தின் உரிமத்தை பெற அண்டை மாநிலங்களிலும் தற்போது போட்டி நிலவுகிறது. அதற்கு காரணம் எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும்படியான அத்தியாவசிய விஷயமான உணவையும் சமையலையும் பற்றிய கதை என்பதுதான்.. இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை லிங்க பைரவி கிரியேஷன்ஸ்’ பெற்றுள்ளது .

“இந்தப்படம் சந்தானம் அவர்களின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன்” என நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்தப்படத்தை தயாரித்துள்ள கெனன்யா பிலிம்ஸ் ஜே.செல்வகுமார் .