செப்-1ல் திருட்டுப்பயலே-2 இசை வெளியீடு..!

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டாலே, அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுவது வழக்கம் தா. அதுதான் சுசி கணேசன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன் வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்திற்கும் எழுந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நடிகர் ஜீவனுக்கு திருப்புமுனை தந்த படம் அது..

தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துவிட்டார் சுசி கணேசன்.. பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா நடித்துள்ள இந்தப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் செப்-1ஆம் தேதி வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் நடைபெற இருக்கிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.