ஜி.வி.பிரகாஷ் படத்தில் சிஷ்யரை அறிமுகப்படுத்தும் பாண்டிராஜ்..!

sema first look 1
இயக்குநர் பாண்டிராஜ் நல்ல படங்களை தயாரித்து வருவதுடன், தனது உதவி இயக்குனர்களின் எதிர்காலத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு வருகிறார்.. அந்தவகையில் தன்னுடைய உதவியாளர் வள்ளிகாந்த்தை தான் தயாரிக்கும் ‘செம’ என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

வள்ளிகாந்த் தன் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக சொல்ல, கதையை மிகவும் ரசித்த பாண்டிராஜ்.இதை நாமே தயாரிக்கலாமே என்று முடிவு செய்து, பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அவரின் நண்பர் இணைந்து தயாரிப்பதுடன் படத்துக்கு வசனமும் எழுதுகிறார்.

இந்த கேரக்டருக்கு பொருத்தமாக ஜி.வி.பிரகாஷ் இருப்பார் என ஏக மனதாக தீர்மானித்து அவரையே கதாநாயகனாக்கியும் விட்டார்கள். படத்தின் கதை அவருக்கும் பிடித்துப்போனதால் நடிப்பதோடு இசையமைத்தும் இருக்கிறார். அர்த்தனா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், என நகைச்சுவை பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளனர். காதலும் நகைச்சுவையும் கலந்த இந்தப்படம் திருச்சி சென்னை பின்புலத்தில் தயாராகி, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.