தமிழ்நாட்டில் ‘செல்வந்தன்’ஆக மாற முயற்சிக்கும் மகேஷ்பாபு..!

இதுவரை மகேஷ்பாபுவின் படங்கள் தமிழ்நாட்டில் தெலுங்கில் தான் முதலி ரிலீஸாகும். அதன்பின்னர் சில காலம் கழித்து தமிழ் டப்பிங்காக வெளிவந்து தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.. ஆனால் இந்தமுறை மகேஷ்பாபு நடித்துவரும் ‘ஸ்ரீமந்துடு’ படம் தெலுங்கில் ரிலீஸாகும் அதே நேரத்தில் தமிழிலும் ‘செல்வந்தன்’ என்கிற பெயரில் ரிலீசாகிறது.

இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். மற்றும் ஜெகபதி பாபு, சுகன்யா, ‘ரமணா’ முகேஷ் ரிஷி, ‘பாண்டிய நாடு’ ஹரீஷ், ‘சரோஜா’ நிகிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்க.. மைத்ரி மூவி மேக்கர்ஸ், எம்.பி..எண்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழில் வெளியிடுகிறது.

இந்த படத்தில் மகேஷ்பாபு உபயோகப்படுத்தும் சைக்கிள் சுமார் 3.75 லட்சம் செலவில் வெளிநாட்டில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ததாம். மகேஷ்பாபு படம் என்றாலே ஆக்சன் தானே.. இந்த படத்திலும் ரசிகர்களுக்கு தீனிபோடும் விதமாக அதிரவைக்கும் ஐந்து சண்டைக்காட்சிகள் இருக்கின்றனவாம்.

மிக பிரமாண்டமான முறையில் சுமார் 70 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாக இருந்த நேரத்தில் தான் ‘பாகுபலி’ படத்தை ரிலீசானது. அதனால் இந்தப்படத்தின் வெளியிட்டை மகேஷ்பாபுவே ஒத்திவைத்தார். தற்போது வரும ஆகஸ்ட்-7ஆம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரிலீஸாகிறது.