‘சீதக்காதி’ படத்தில் முக்கிய வேடத்தில் மகேந்திரன்..!  

????????????????????????????????????????????
எண்பதுகளில் மிகப்பெரிய ஜாம்பவான் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் மகேந்திரன்.. திடீரென ஒருநாள் அட்லீ டைரக்சனில் விஜய் நடித்த தெறி’ படத்தில் மெயின் வில்லன் ரோலில் நடிகராக அரிதாரம் பூசி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார். அவரது வில்லத்தனத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து பல படங்களில் நடிக வாய்ப்பு வந்தாலும், நல்ல கதைக்கும் கேரக்டருக்கும் காத்திருந்த மகேந்திரனுக்கு தேடி வந்த படம் தான் ‘சீதக்காதி’.. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி தரணீதரன் இயக்கம் இந்தப்படத்தில் மகேந்திரனுக்கு படத்தின் கதையே இவரை சுற்றி சுழலும் முக்கிய கதாபாத்திரமாம்..