நாடக கலைஞர்களை கௌரவித்த சீதக்காதி படக்குழு..!

அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்து வரும் விஜய் சேதுபதியின் 25-ஆவது படமாக உருவாகியுள்ளது சீதக்காதி திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகிறது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நாடக நடிகராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 40 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.

சினிமா நடிகராவதற்கு முன் நாடக நடிகராக தோன்றுகிறார் விஜய் சேதுபதி. அந்த காட்சிகளில் 17 நாடக நடிகர் – நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தநிலையில் சமீபத்தில் இந்தப்படக்குழுவினர் நிகழ்த்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘சீதக்காதி’யில் நடித்துள்ள 17 நாடக நடிகர், நடிகைகளையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மேடையேற்றி, அவர்களின் பெருமைகளை கூறி, அறிமுகப்படுத்தி வைத்தார்கள்

இந்த படத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கேரக்டரில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள்.” என்று குறிப்பிட்டார் நடிகர் விஜய்சேதுபதி. இந்தப்படத்தில் அர்ச்சனா, மவுலி, இயக்குனர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார் சிறப்பு தோற்றங்களில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி சங்கர், கருணாகரன், நடிகர் வைபவின் சகோதரர் சுனில், இயக்குனர் டீகே உட்பட பலர் நடித்துள்ளனர்.