ஜீவாவை மீண்டும் மேலே அழைத்துவரும் ‘சீறு’

திறமையான நடிகனாக வலம் வந்த ஜீவாவிற்கு கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த 2020ல் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கும் வகையில் அவர் நடித்து வரும் படங்கள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. பாலிவுட்டிலும் ’83’ என்கிற படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் தமிழில் ரத்தின சிவா டைரக்ஷனில் இவர் நடித்துள்ள ‘சீறு’ திரைப்படம் வரும் பிப்-7ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமீபத்தில் பேசிய ஜீவா உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக இந்த படத்தை தயாரித்துள்ள ஐசரி கணேஷ் பேசும்போது இந்த படத்தின் மீது உள்ள நம்பிக்கையில் இதை வேறு யாருக்கும் கொடுக்காமல் நாங்களே ரிலீஸ் பண்ணுகிறோம், அந்த அளவிற்கு எங்களுக்கு இந்த படம் நம்பிக்கை தந்துள்ளது என்று கூறினார்.

இது ஒருபக்கம் இருக்க இந்தப்படத்தின் சில நிமிட காட்சி ஒன்று யூ டியூப்பில் வெளியானது. அந்த காட்சியில் ஜீவா மற்றும் வில்லன் வருண் இருவருக்குமான உரையாடலை பார்க்கும்போதே இந்த படத்தை பார்க்கவேண்டும் என என்கிற ஆவல் ஒரு சாதாரண ரசிகனுக்கும் ஏற்படும். அந்த வகையில் சீறு படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார் இயக்குனர் ரத்தின சிவா. நிச்சயம் இந்த படம் ஜீவாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை…