படத்தின் டைட்டிலையே மாற்றவைத்த ஓவியாவின் பாப்புலாரிட்டி..!

oviya-1

இன்று எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. அதிலும் ஓவியா பற்றிய பேச்சுக்கள் தான் காதில் அதிகம் விழுகின்றன.. இந்த நிகழ்ச்சியில் இதுநாள் வரை ஓவியா சம்பாதித்துள்ள நற்பெயர், திரையுலகிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது..

அதன் ஒரு பகுதியாகத்தான் ‘ஓவியா’ நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து ‘சீனி’ என்கிற படத்துக்கு ‘ஓவியாவ விட்டா யாரு’ என டைட்டிலை மாற்றியுள்ளார்கள். ஓவியாவுக்கு தற்போதுள்ள புகழை பயன்படுத்தி விரைவில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றதாம்.

இந்தப்படத்தில் ஓவியா தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிப் பெண் நிருபராக நடிக்கிறார். மற்றும் மற்றும் சஞ்சய், பரத்ரவி ஆகியோருடன் ராதாரவி, செந்தில், ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், கஞ்சாகருப்பு, சின்னிஜெயந்த், வையாபுரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்தப்படத்தில் சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் பாத்திரம் ஏற்றுள்ளார். பவர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ராஜதுரை என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை மக்கள் தொடர்பாளரான மதுரை செல்வம் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.