மனம் கவர்ந்தவரை மணம் முடித்தார் ‘பிச்சைக்காரன் நாயகி..!

satna marriage

சில ஹீரோயின்கள் இப்படித்தான்.. அறிமுகமான படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிடுவார்கள்.. ஆனால் ஒன்றிரண்டு படங்களோடு ரசிகர்களை ஏங்கவைத்துவிட்டு டாட்டா காட்டிவிட்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள். ‘பிச்சைக்காரன்’ படத்தின் நாயகி சாத்னா டைட்டஸும் அந்தவகையி சேர்ந்தவர்தான்..

பிச்சைக்காரன் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.. அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான கார்த்திக் என்பவரை காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

சில பல குடும்ப எதிர்ப்புகளுக்கு பிறகு இவர்கள் காதல் பிப்-6ல் சுமூகமாக திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது. நமது behind frames சார்பாக மணமக்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.