சத்யராஜூக்கு அமலாபால் செய்த உதவி..!

murugavel

குணச்சித்திர வேடங்களில் தற்போது ஜொலித்துவரும் நடிகர் சத்யராஜ், மீண்டும் கதையின் நாயகனாக ‘முருகவேல்’ என்கிற படத்தில் நடிக்கிறார்.. அதிலும் சிறப்பம்சமாக இந்த படத்தில் இந்த படத்தில் தொழிலதிபராகவும், அரசால் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட புதிதாக ஏற்படுத்த பட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும் என சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

கதையின் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் இன்னொரு நாயகியாக ரம்யாநம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடித்துள்ளனர். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.

காதை கொடுங்கள்… ஒரு ரகசியம்.. இது மலையாளத்தில் மோகன்லால்- அமலாபால் நடிப்பில் வெளியான ‘லைலா ஓ லைலா’ என்கிற படம் தான் என்பதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்..