ஜி.வி.பிரகாஷுக்கு தாத்தாவாக சத்யராஜ்-ராஜ்கிரண்…!

kbkr 2
பாண்டிராஜின் வெற்றிப்படமான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தி இன்றண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.. இதில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.. தற்போது இயக்குனர் ராஜேஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்துவரும் ஜி.வி, அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

கிராமத்து பின்னணியில் உருவாக்க இருக்கும் இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் தாத்தாக்களாக சத்யராஜும் ராஜ்கிரணும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே ‘மஞ்சப்பை’, ‘ரஜினி முருகன்’ படங்களில் தததாகவாக நடித்துள்ளார் ராஜ்கிரண்.. ஆனால் சத்யராஜூக்கு தாத்தாவாக நடிப்பது நிச்சயம் புது அனுபவமாகத்தான் இருக்கும்.