‘சத்யா’ சாட்டிலைட் ரைட்ஸ் இப்போ சன் டிவி கையில்..!

Sathya

நாதாம்பாள் பிலிம் பேக்டரி​ சார்பில் சத்யராஜ் வழங்க சிபிராஜ் தயாரித்து நடிக்கும் படம் தான் ‘சத்யா’. தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஷணம்’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இந்தப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக படத்திற்கு பலம் சேர்க்கும் கேரக்டரில் நடித்துள்ளார்.

தற்போது இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் நல்ல தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் சிபிராஜின் ஜாக்சன் துரை படத்தின் சாட்டிலைட் ரைட்சும் இதேபோல ரிலீசுக்கு முன்பே சன் டிவியால் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.