சசிகுமார் படத்தை தயாரிக்கும் ‘குற்றம்-23’ தயாரிப்பாளர்..!

sundarapandiyan producer-1

கடந்த வருடம் அருண்விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்படத்தை தயாரித்த இந்தர்குமாரே அருண்விஜய்யை வைத்து தற்போது தடம் என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்தநிலையில் சசிகுமார்-எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘சுந்தரபாண்டியன்-2’ படத்தை இந்தர்குமார் தயாரிக்கவுள்ளார். தற்போது ஒரு நடிகராக அதுவும் வில்லனாக உருமாறியுள்ள இந்தர் குமார், இந்தப்படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்கவும் இருக்கிறார்.

ஏற்கனவே சசிகுமாருடன் இணைந்து கொடிவீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் இந்தர்குமார்.