டிசம்பர் 28ல் சர்வம் தாள மாயம் ரிலீஸ்..!

sarvam thaalamayam

1997ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு, அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு நடிப்பில் 2001ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இடையில் டைரக்சனுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டாலும் மணிரத்னத்தின் பம்பாய், குரு, கடல் போன்ற படங்களின் ஒளிப்பதிவு செய்தது ராஜிவ் மேனன் தான்.

தற்போது இவர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படம். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒரு இளைஞனின் இசைப் பயணம் பற்றிய இந்த படத்தில் பாடல்கள் மற்றும் இசைக்கு பெரிய இடம் உள்ளது. . வரும் டிசம்பர் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.