சர்வம் தாள மயம் – விமர்சனம்

sarvam thaal mayam movie review

மிருதங்கம் செய்யும் தொழில் செய்து வருபவர் குமரவேல். மகன் ஜிவி பிரகாஷ் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்கள் ஆசை. ஆனால் விஜய் ரசிகரான அவர் மன்றம், ஆட்டம் பாட்டம் என சுற்றி வருகிறார் இடையில் நர்சாக பணிபுரியும் அபர்ணா பாலமுரளி மீது காதல் ஒருபக்கம்..

இதற்கிடையே பிரபல மிருதங்க வித்வான் நெடுமுடி வேணுவுக்கு அவர் வாசிக்கும் சபாவிற்கே மிருதங்கத்தை கொண்டுசென்று கொடுக்கும் வாய்ப்பு ஜி.வி.பிரகாஷுக்கு கிடைக்கிறது அப்போதுதான் தனக்குள்ளும் இசை ஆர்வம் புதைந்து கிடப்பதை உணர்கிறார் ஜி.வி.பிரகாஷ் அதைத்தொடர்ந்து பல முயற்சிகள் செய்து ஒருவழியாக நெடுமுடி வேணுவின் சீடராக சேர்கிறார்.

ஆனால் அவரது உதவியாளராக இருக்கும் வினீத்திற்கு ஜிவி.பிரகாஷை சேர்த்துக்கொண்டது பிடிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் நெடுமுடி வேணுவை விட்டு விலகி, தனது தங்கை டிடி நடத்திவரும் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக சேர்கிறார் வினீத். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த ஷோவில் ஜிவி பிரகாஷ் மிருதங்கம் வாசித்து தோல்வியைத் தழுவ நேரிடுகிறது

கர்நாடக சங்கீதத்தையும் தனது பெயரையும்\ கெடுத்து விட்டதாக குற்றம் சாட்டி ஜிவி பிரகாஷை வெளியே துரத்தும் நெடுமுடி வேணு., ஜிவிக்கு பதிலாக இன்னொரு சிஷ்யனை உருவாக்க முயற்சி செய்கிறார் ஜிவி பிரகாஷ் பித்து பிடித்தது போல இந்தியா முழுக்கவும் இசைப் பயணம் மேற்கொள்கிறார் இந்த நிலையில் புதிதாக தான் நம்பிய சிஷ்யன் வினீத் சேர்ந்து கொண்டு தன்னை காலை வாரிவிடவே, தேசாந்திரியாக தெரியும் ஜி.வி.பிரகாஷை மீண்டும் வரவழைக்கிறார் நெடுமுடி வேணு