சரத்குமாரின் வெற்றிப்பட இயக்குனரின் புதிய படைப்பு ‘வருஷநாடு’..!

சரத்குமாரை வித்தியாசமான தோற்றத்திலும் நடிப்பிலும் நமக்கு காட்டிய படம் தான் ‘மாயி’.. அந்தப்படத்தை இயக்கிய சூர்யபிரகாஷ் தான் தற்போது ‘வருஷநாடு’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் குமரன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சிருஷ்டி டாங்கோ நடிக்கிறார். சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ராஜ்கபூர், சந்தானபாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பாடல்களை  அண்ணாமலை, வால்மீகி, கவிகார்க்கோ, தமிழமுதன் ஆகியோர் எழுத இசையமைக்கிறார் புதுமுகம்  யத்தீஷ்மகாதேவ்.

ராமேஸ்வரம் பகுதியில் நடப்பது மாதிரியான கதையாம்.. எவ்வளவோ சோகங்களை சுமந்துகொண்டிருக்கும் சோக பூமியான ராமேஸ்வரத்தில் சுகமான தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த ஒரு காதல் ஜோடியின் காதல் கதைதான் ‘வருசநாடு’. இதில் அடிதடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்து படமாக்கி இருக்கிறார்களாம்.