விடுபட்ட ராதிகா பெயர் ; சரத்குமார் ஏமாற்றம்..!

sarath_kumar's disapponintment

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா உட்பட பலர் நடித்த ‘தர்மதுரை’ படம் வெளியானது. ரசிகர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுதுபதியின் அம்மாவாக ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

குறிப்பாக ‘கிழக்கு சீமையிலே’ படத்திற்கு பிறகு அவருக்கேற்ற வகையில் அமைந்திருந்த யதார்த்தமான கிராமத்து பெண்மணி கேரர்க்டரில் சிறப்பாக நடித்திருந்தார் ராதிகா. நேற்று நடிகர் சரத்குமார் தர்மதுரை படத்தை பார்த்துவிட்டு ராதிகா மற்றும் படத்தில் நடித்த அனைவரது நடிப்பையும் சீனுராமசாமி டைரக்சனையும் பாராட்டியுள்ளார்.

அதேசமயம் படம் பார்க்க ஆரம்பித்த் சரத்குமாருக்கு டைட்டில் கார்டை பார்த்ததும் அதிர்ச்சி.. ஆம். அதில் ராதிகாவின் பெயர் இடம்பெறவில்லை.. அதனால் படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இது குறித்து டிவிட்டரில் “ராதிகா பெயர் டைட்டிலில் இல்லாததும்.. அவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளதும் ஏமாற்றமளிக்கிறது.. இனி வரும் காலங்களில் சீனியர் நடிகர்களுக்கு உரிய மரியாதை வழங்குவார்கள் என நம்புகிறேன்” என தனது வருத்தத்தையும் பதிவுசெய்துள்ளார் சரத்குமார்.