ஆரம்பிக்கிறது சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’..!

sarathkumar

கிட்டத்தட்ட முத்திரையே குத்திவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது.. யாருக்கு..? சரத்குமாருத்தான்..? பின்னே நிமிர்ந்து நில், அச்சம் தவிர், சென்னையில் ஒரு நாள், சண்டமாருதம் என நடிக்கும் படங்களில் எல்லாம் போலீசாகத்தானே நடித்து வருகிறார் சரத்குமார்..

அறிமுக இயக்குனர் பிருத்வி ஆதித்யாவுக்கு மட்டும் சரத்குமாரை வேறு மாதிரி கற்பனை செய்யவா தோன்றியிருக்கும்..? இருக்காதுதானே..? அந்தவகையில் தான் இயக்கிவரும் ‘ரெண்டாவது ஆட்டம்’ படத்தில் மிக முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் சரத்குமாருக்கு மீண்டும் போலீஸ் யூனிபார்மை அணிவித்துள்ளார் பிருத்வி ஆதித்யா.

ஒரு தியேட்டரில் ரெண்டாவது ஆட்டம் (செகன்ட் ஷோ) நடக்கும்போது நிகழும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை.. மற்ற படங்களைப்போல சரத்குமார் இதில் சூப்பர் போலீசாகவெல்லாம் நடிக்கவில்லை. ஆனால் பிரச்சனைகளை தனது அதிகார எல்லைக்குட்பட்டு வித்தியாசமாக டீல் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.