ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த சரத்குமார்…!

sarathkumar joins to gv prakash movie

கடந்த வருடத்தில் இருந்து நடிகர்சங்க தேர்தல், அது தொடர்பான விஷயங்களில் பிஸியாக இருந்த சரத்குமார் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.. இந்தமுறை இளைய தலைமுறையுடன் கைகோர்க்கும் விதமாக ஜி.வி,பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார் சரத்குமார்.

இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக முதன்முறையாக முறையே வாள் சண்டை பயற்சி மேற்கொண்டுவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சண்முகம் முத்துசுவாமி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.