சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘சென்னையில் ஒருநாள்-2’..!

chennaiyil oru naal-2

சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்த ‘சென்னையில் ஒருநாள்’ படம் சில வருடங்களுக்கு முன் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.. அந்த சென்டிமென்ட்டை பின்பற்றி தற்போது சரத்குமார் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு ‘சென்னையில் ஒருநாள்-2’ என டைட்டில் வைத்துள்ளார்கள்.. ஆனாலும் முதல் பாகத்துக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

இந்தப்படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றதுபடத்தை ஜெ.பி.ஆர் இயக்குகிறார்.. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரில்லர் கதையை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நிசப்தம் பட புகழ் குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் நடிக்க இருக்கிறார்.

சரத்குமாரின் கதாபாத்திரம் ‘ஸ்டைலிஷ் அன்டர்கவர் ஏஜெண்ட் எனவும், அவர் இந்த படத்தில் புலன் விசாரணை செய்யும் முறை படத்தை பரபரப்பாக கொண்டுசெல்லும் என்கிறார் இயக்குனர் ஜெ.பி.ஆர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி நிலையில் கோவையில் வைத்து 30 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.