ஓரணியில் இணைந்த இரு துருவங்கள்..!

sarath - karunas
நடிகர் சங்க தேர்தலுக்கு முன்பிருந்தே விஷால் அணியில் இருந்துகொண்டு சரத்குமாரை தீவிரமாக எதிர்த்து வந்தவர் கருணாஸ். அந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வென்று கருணாஸ் நடிகர் சங்க துணைத்தலைவராகவும் ஆனார். ஆனால் காலம் இப்போது இருவரையும் அரசியலில் ஓரணியில் இணைந்து செயல்பட வைத்துள்ளது.

ஆம். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் இந்த இருவருக்குமே தோழமை கட்சிகள் என்கிற வகையில் தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. சரத்குமார் திருச்செந்தூரிலும், கருணாஸ் திருவாடனை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.