அஜித் படங்களின் அசிஸ்டன்ட் டைரக்டர் இயக்கத்தில் உருவாகும் ‘கோ-2’..!

தமிழ் சினிமாவில் இது என்ன மாதிரியான ட்ரெண்ட் ஆக உருவாகியுள்ளதோ தெரியவில்லை.. பலரும் தங்களது ஹிட் பாகங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். இப்போது இந்தப்பட்டியலில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘கோ’ படமும் இணைந்துள்ளது.

படத்தின் இயக்குனர், நடிகைகள் அனைவரும் முதல் பாகத்திற்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதவர்கள். ஹீரோவாக பாபி சிம்ஹா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி.. இந்தப்படத்தை விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்துள்ள சரத் தான் இயக்குகிறார். கதைகூட முந்தைய பாகத்திற்கு தொடர்பில்லாத ஒன்றுதான்.

தயாரிப்பாளர் மட்டும் ஏற்கனவே ‘கோ’ படத்தை தயாரித்த அதே எல்ரெட் குமார் தான். “ஒரு படத்தின் அடுத்த பாகம் என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றல்லாமல் அந்தக் கதை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு இயக்குனர் சரத் சொன்ன கதை உள்ளது என்றுதான் யோசித்தோம். அதன் விளைவாக உருவானதுதான் ‘கோ-2’ என்கிறார் எல்ரெட் குமார்.