“சிம்பு பாடல்களை தனுஷ் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்” ; சந்தானம்..!

santhanam

சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.. இந்தநிலையில் வரும் டிச-22ஆம் தேதி சக்க போடு போடு ராஜா’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்க, விவேக் ரோபோ சங்கர், பவர்ஸ்டார், மயில்சாமி, விடிவி கணேஷ் உள்ளிட்ட நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளனர். சேதுராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை, விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

சிம்பு இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிச-6ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சந்தானம்.. கூடவே விடிவி கணேஷும் ரோபோ சங்கரும்.. இந்தப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் சந்தானம். அப்போது சிம்பு இசையமைத்துள்ள பாடல்களை தனுஷ் வெளியிடுவது ஒரு புதுமையாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் தான் தனுஷிடம் கேட்டோம்.. அவரும் ஒப்புக்கொண்டார் என கூறினார் சந்தானம்.