5 நடன இயக்குனர்கள் வடிவமைத்த சந்தானத்தின் அறிமுகப்பாடல்..!

santhanam opening song

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’ இந்தப்படத்தில் “கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும் காலத்திலே” என்கிற சந்தானத்தின் அறிமுக பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கபட்டது. இந்தப்பாடலுக்கு சிம்பு இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத் பாடியுள்ளார் .

இதில் ஸ்பெஷல் என்னவென்றால், முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இந்தப்பாடலுக்கு பணியாற்றினார். நவம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தில் .முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத்ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் சிம்பு இசையில், யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடியுள்ளனர் நவம்பர் 14 தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.