“காப்பியடித்தேன்” ; கவுண்டமணி முன் ஒப்புக்கொண்ட சந்தானம்..!

santhanam - kavundar

’49-ஓ’ படத்துக்கு பிறகு கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இந்த விழாவில் கவுண்டமணி கலந்துகொண்டது ஹைலைட் என்றால், கவுண்டரின் பார்முலாவை பின்பற்றி நடிக்கும் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது தான் ஆச்சர்யம்.

அதைவிட ஆச்சர்யம் தனது படங்களில் முக்கியமான காமெடி காட்சிகளில் சரியான காமெடி டயலாக்குகள் கிடைக்காத நேரங்களில் கவுண்டமணியின் படங்களை போட்டு பார்த்து அதிலிருந்து ஐடியாக்களை பெறுவது வழக்கம்” என அவர் முன்னிலையிலே ஓப்பனாக ஒப்புக்கொண்டது தான். அதுமட்டுமல்ல, தனது நடிப்பிலும் கவுண்டமணியின் தாக்கம் இருப்பதையும் ஒப்புக்கொண்டார் சந்தானம்.

கவுண்டமணி பேசும்போது, “சினிமா நலிந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை.. ஏதாவது ஒரு படத்திற்கு போனால், அதை நேற்றே தூக்கியாச்சே என்கிறார்கள்.. நிலைமை இப்படியே போனால் சினிமா அழிவுப்பாதையை நோக்கித்தான் போகும்.. தயவுசெய்து அதை காப்பற்றுங்கள்” என கோரிக்கை வைத்தார்.

இந்த விழாவில் நடிகர் விஜய்சேதுபதியும் கலந்துகொண்டார். கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமா படப்பிடிப்புக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் ஒன்றாக நடித்துள்ளார் கவுண்டமணி.