சக்க போடு போட தயாராகும் சந்தானம் – விவேக்..!

santhanam-vivek

பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிய பின்னர் தங்களது படங்களில் உடன் நடிக்கும் காமெடி நடிகர்களாக, ஏற்கனவே தனது வட்டத்தில் இருப்பவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.. இப்போது ஹீரோவாக வலம் வந்துகொண்டு இருக்கும் சந்தானம், இதுவரை அப்படி இருந்தாலும், தற்போது தனது புதிய படமான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் அதிரடி கூட்டணியாக விவேக்குடன் இணைந்துள்ளார்..

ஜி.எல்.சேதுராமன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை நடிகர் வி.டி.வி.கணேஷ் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் பவர்ஸ்டார், ரோபோ சங்கர், மயில்சாமி, என இன்னும் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் விவேக்கிற்கு படம் முழுவதும் வரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். சம்பத், சரத் லோகித்ஸ்வா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள்.. கதாநாயகியாக வைபவி நடிக்கிறார்.