ஆயுத பூஜை விடுமுறையை கைப்பற்றிய விஷாலின் ‘சண்டக்கோழி-2′..!

sandakozhi-2 release 2

விஷால் நடிப்பில் லிங்குசாமி டைரக்சனில் 2005-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சண்டக்கோழி’,, விஷாலின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இந்தப்படம் அமைந்தது. 13 வருடங்களுக்கு பிறகு லிங்குசாமி-விஷால் கூட்டணியில் இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது ‘சண்டக்கோழி 2’. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண், ஷண்முகராஜன் ஆகியோர் இதிலும் தொடர்கிறார்கள். மற்றும் கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரீஷ் பெராடி, ‘கபாலி’ விஸ்வந்த், ‘அப்பாணி’ சரத், முக்கிய வேடங்களில் நடித்துள்ள முக்கியமாக முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மீரா ஜாஸ்மின் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் தற்போது படங்களின் ரிலீஸ் தேதியை வரையறை செய்யும் தயாரிப்பாளர்கள் சங்க பட வெளியீட்டு குழுவிடம் இந்தப்படத்தை அக்-18ல் ரிலீஸ் செய்ய தேதி கேட்டு விண்ணப்பித்திருந்தார் விஷால். அவர்களும் பரிசீலித்து, ஓகே சொல்லிவிட, இந்தப்படம், அக்டோபர் மாதம் 18-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தான் படங்கள் வெளியாகும். ஆனால் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாட்கள் வருவதால், இந்தப் படம் வியாழக்கிழமையே ரிலீஸாகிறது.