நாளை சமுத்திரக்கனியின் 2 படங்கள் ரிலீஸ்..!

samuthirakani 2 films
தமிழ் சினிமாவை பொறுத்து தனித்தனியாக எந்த ஹீரோக்களின் ரசிகர்களாக இருந்தாலும் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியை பொறுத்தவரை தங்களுக்கு பிடித்தவர்கள் பட்டியலில் முக்கிய இடம் கொடுத்து வைத்திருப்பார்கள்.

அந்த அளவுக்கு சமுத்திரக்கனி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அதன் மதிப்பும் சற்று கூடிவிடுகிறது. ரசிகர்களை தியேட்டருக்கு அழைக்கும் முக்கிய காரணியாகவும் அவர் இருக்கிறார். கடந்த வாரம் தான் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்த ‘நிமிர்’ படம் வெளியாகியுள்ள நிலையில் நாளை சமுத்திரக்கனி நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.

இதில் ‘முகவரி’ இயக்குனர் துரை இயக்கியுள்ள ‘ஏமாலி’ படம்போலீஸ் அதிகாரியாகவும், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனின் தந்தையாக நடித்துள்ள ‘மதுரவீரன்’ படம் மண்ணின் மைந்தனாகவும் சமுத்திரக்கனியின் நடிப்பில் இருவித பரிமாணங்களை காட்ட இருக்கிறது.