சமுத்திரக்கனியை ‘ஏமாலி’யாக்கிய வி.இசட்.துரை..!

aemali

‘6 மெழுகுவர்த்திகள்’ என்கிற நெகிழ்ச்சியான, விழிப்புணர்வு தரக்கூடிய படத்தி கொடுத்த இயக்குனர் வி.இசட்.துரை அதன்பின் சில வருடங்கள் அமைதியாக அடுத்த படத்திற்கு தயாராகி வந்தவர், இதோ இப்போது ‘ஏமாலி’ என்கிற படத்திற்கு பூஜை போட்டு படத்தை ஆரம்பித்து விட்டார்..

சமுத்திரக்கனி தான் கதையின் நாயகனாக நடிக்கிறார்.. தவிர. புதுமுகம் சாம் ஜோன்ஸ் இதில் அறிமுக நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது. பொதுவாக ‘ஏமாளி’ என்கிற வார்த்தையைத்தான் நாம் பயன்படுத்துவது வழக்கம்.. ஆனால் ஒரு எழுத்தை மற்றும் மாற்றி ‘ஏமாலி’ என பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் காரணம் இல்லாமலா இருக்கும்.