பெரியாரிஸ்ட்டாக மாறிய சமுத்திரக்கனி..!

மூடர்கூடம் படம் மூலம் தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, மிகப்பெரிய ஜாம்பவான்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் பாராட்டுக்களையும் பெற்றவர் இயக்குனர் நவீன்.. தனது அடுத்த படத்தை ஆரம்பிப்பதற்குள், தனது நண்பர் தனராம் சரவணன் இயக்கத்தில் சின்ன பட்ஜெட்டில் ‘கொளஞ்சி’ என்கிற படத்தை தயாரித்து முடித்துவிட்டார்.

நவீனும் தனராம் சரவணனும் சிம்புதேவனிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியபோது நட்பானவர்கள்.. அந்த நட்பின் அடிப்படையில் சரவணனுக்காக படம் தயாரித்துள்ளார் நவீன். இந்தப்படத்தில்   புதுமுகங்கள் தான் ஜோடி என்றாலும் மூடர்கூடம் இசையமைப்பாளர், எடிட்டர் ஆகியோரே இந்தப்படத்தில் பணியாற்றி இருக்கின்றனராம்.

13 வயது பையனுக்கும் அவனது பெற்றோருக்குமான கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பையனின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி பெரியாரிஸ்ட்டாக வருகிறாராம். அவரது மனைவியாக பாசமுள்ள அம்மாவாக நடித்திருக்கிறார் சங்கவி.. மூடர்கூடம் சென்ராயனும் இந்தப்படத்தில் இருக்கிறார்.