சமுத்திரகனியை அழவைத்த ‘கீதாரி’, கிட்ணாவாக மாறிய கதை..!

நாடோடிகள் படத்தை இயக்கிக்கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு கீதாரி என்கிற நாவல் படிக்க கிடைத்திருக்கிறது. இதை சு.தமிழ்ச்செல்வி என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலை படித்ததும் அவரையறியாமலேயே அழுதுவிட்டாராம்.

அந்த அளவுக்கு மனிதாபிமானம் பற்றி அந்த நாவல் பேசியிருந்ததாம். காட்டுக்குள் இருக்கவேண்டிய மனிதர்கள் நாட்டுக்குள் இருக்கும் அவலத்தை அந்த நாவலில் பொட்டில் அடித்தமாதிரி சொல்லி இருந்தாராம் சு.தமிழ்ச்செல்வி.

உடனே அந்த நாவலை படமாக்கவேண்டும் என தோன்றியதால் சு.தமிழ்ச்செல்வியிடம் முறையாக அனுமதி வாங்கி அதைத்தான் இப்போது ‘கிட்ணா’ என்கிற பெயரில் படமாக்கி வருகிறார். சமுத்திரகனிக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார்.